கிரிக்கெட்டில் அசத்தும் டோனி PUBG எப்படி விளையாடுவர்? முதல் முறையாக ரகசியத்தை உடைத்த இந்திய வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனியுடன் சேர்ந்து பப்ஜி விளையாட்டு விளையாடுவேன் என்று சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சஹால் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.

இதில் ஒருநாள் தொடரை இந்திய அணியும், டி20 தொடரை அவுஸ்திரேலிய அணியும் கைப்பற்றியது.

இதைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா அணி, இப்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சஹால், நானும் டோனியும் ஒன்றாக சேர்ந்து நிறைய முறை பப்ஜி விளையாடியுள்ளோம்.

அணியில் 7 முதல் 8 வீரர்கள் வரை இரண்டு அல்லது மூன்று மணி நேரங்கள் வரை பப்ஜி விளையாடுவோம். டோனியின் தலைமையில் ஆடுவது எப்போதுமே அற்புதமான ஒரு விஷயமாக இருக்கும்.

அதன் பின் நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம், அவர் தான் என்னுடைய முதல் தலைவர் என்று கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட இந்திய வீரர்கள் பப்ஜி கேம் விளையாடிய புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers