ஒரே ஓவரில் 35 ஓட்டங்கள்.... 55 பந்துகளில் 147! வெளுத்து வாங்கிய இந்திய வீரர் புதிய சாதனை

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் இளம் வீரரான ஷ்ரேயஸ் அய்யர் உள்நாட்டு டி20 தொடரில் 55 பந்துகளில் 147 ஓட்டங்கள் அடித்து அபார சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவில் உள்ளூர் தொடரான முஷ்டாக் அலி ட்ராபி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் ரகானே தலைமையிலான மும்பை அணியும் னைலீஸ் லமிசானே தலைமையிலான சிக்கிம் அணியும் மோதின.

அதன் படி முதலில் ஆடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ஓட்டங்கள் எடுத்தது.

அதன் பின் ஆடிய சிக்கிம் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 104 ஓட்டங்கள் எடுத்து 154 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இப்போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய இளம் வீரர் ஸ்ரேயஸ் அய்யர் 55 பந்துகளில் 7 பவுண்டரிகள் 15 சிக்சர்களுடன் 55 பந்துகளில் 147 ஓட்டங்கள் புரட்டி எடுத்தார்.

இதன் மூலம் ரிஷப் பாண்ட்டின் அதிகபட்ச டி20 ஸ்கோரான 128 நாட் அவுட்டை முறியடித்து ஸ்ரேயஸ் அய்யர் சாதனை புரிந்தார்.

குறிப்பாக இந்த இன்னிங்சில் சிக்கிம் மிதவேகப்பந்து வீச்சாளர் டாஷி பல்லா என்பவரின் ஒரே ஓவரில் அய்யர் 35 ஓட்டங்கள் விளாசினார்.

அதேபோல் தமிழ வீரர் முரளி விஜய் அடித்த 11 சிக்சர்கள்தான் அதிக சிக்சர்களுக்கான சாதனையாக இருந்து வந்தது. தற்போது அந்தச் சாதனையையும் 15 சிக்ஸர்கள் அடித்து ஸ்ரேயஸ் அய்யர் முறியடித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers