பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டி.. விராட் கோஹ்லி என்ன கூறினார் தெரியுமா?

Report Print Kabilan in கிரிக்கெட்

உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து அரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் எடுக்கும் முடிவை ஏற்போம் என்று இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்திய துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரம் பாகிஸ்தான் கிரிக்கெட்டை பாதித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி உலகக் கிண்ண தொடரில் பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இந்நிலையில், விசாகப்பட்டினம் மைதானத்தில் நாளை நடைபெற உள்ள முதல் டி20 போட்டியில் இந்திய அணி அவுஸ்திரேலியாவை சந்திக்கிறது.

இதில் பங்கேற்க வந்துள்ள இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவது குறித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘பயங்கரவாதத் தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். நாடு என்ன செய்ய நினைக்கிறதோ, இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன முடிவு எடுக்கிறதோ, அதற்கு துணை நிற்போம். அரசு மற்றும் கிரிக்கெட் வாரியம் எடுக்கும் முடிவை மதிப்போம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்