வரலாற்று வெற்றிக்கு பின்னர் இலங்கை அணி பங்கேற்கும் போட்டிகள் என்ன? முழு பட்டியல் இதோ

Report Print Raju Raju in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுவதுமாக வென்று வரலாற்று சாதனை படைத்த இலங்கை அணி அடுத்து பங்கேற்கவுள்ள கிரிக்கெட் தொடர்கள் குறித்து தெரியவந்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின்னர் வரும் 3ஆம் திகதி தொடங்கும் ஒருநாள் தொடரில் அந்த அணியுடம் மோதுகிறது இலங்கை.

முதல் ஒருநாள் போட்டி மார்ச் 3 ஆம் திகதி நடக்கிறது.

மார்ச் 6 இரண்டாவது போட்டியும், மார்ச் 10 மூன்றாவது போட்டியும், மார்ச் 13 நான்காவது போட்டியும், மார்ச் 16 ஐந்தாவது போட்டியும் நடைபெறவுள்ளது.

இதையடுத்து இரு அணிகள் பங்குபெறும் டி20 தொடர் நடக்கவுள்ளது.

மார்ச் 19ஆம் திகதி முதல் போட்டியும், மார்ச் 22ஆம் திகதி இரண்டாவது போட்டியும், மார்ச் 24ஆம் திகதி மூன்றாவது போட்டியும் நடைபெறவுள்ளன.

தென் ஆப்பிரிக்க தொடருக்கு பின்னர் ஸ்காட்லாந்துக்கு இலங்கை அணி சுற்றுபயணம் மேற்கொள்கிறது. அங்கு இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கையும், ஸ்காட்லாந்தும் மோதுகிறது.

மே 18 முதல் ஒருநாள் போட்டியும், மே 21 இரண்டாவது ஒருநாள் போட்டியும் நடக்கவுள்ளது.

இதன்பின்னர் மே 30ஆம் திகதி நடைபெறும் உலக கோப்பை தொடரில் இலங்கை அணி பங்கேற்கிறது. இதற்கடுத்து ஜூலை மாதம் டெஸ்ட் தொடரில் இலங்கை அணி விளையாடவுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers