ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளர்களால் தமிழக வீரர் அஸ்வின் நீக்கப்படுகிறாரா? குல்தீப் யாதவ் விளக்கம்

Report Print Kabilan in கிரிக்கெட்

அஸ்வின் மற்றும் ஜடேஜாவை நாங்கள் அணியில் இருந்து நீக்கவில்லை என்றும், எங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம் என்றும் இந்திய அணியின் ரிஸ்ட் சுழற்பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் இளம் சுழற்பந்து வீச்சாளர்களான யுவேந்திர சாஹலும், குல்தீப் யாதவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளர்களான இவர்களின் திறமை மீது இந்திய அணி நிர்வாகம் முழு நம்பிக்கை வைத்துள்ளது.

ஆனால் தமிழக வீரர் அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் கிடைப்பது அரிதாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் ஹர்த்திக் பாண்டியா காயம் காரணமாக விலகியதாலேயே ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

AP

இதற்கிடையில், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த குல்தீப் யாதவ் இதுகுறித்து கூறுகையில்,

‘அஸ்வின், ஜடேஜா என யாரையும் நாங்கள் வெளியேற்றவில்லை. இது எங்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் தான். அதை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டோம்.

இந்திய அணிக்காக அஸ்வின், ஜடேஜா எப்போதுமே சிறப்பாக செயல்பட்டு வருபவர்கள் தான். டெஸ்ட் போட்டியில் அவர்கள் இருவரும் தற்போதும் விளையாடி வருகின்றனர். நாங்கள் அவர்களிடம் இருந்து ஏராளமாக கற்றுள்ளோம்.

அஸ்வினும், ஜடேஜாவும் அதிக அனுபவம் கொண்டவர்கள். நான் டெஸ்ட் அணியில் இடம்பெற்ற தருணங்களில் அவர்களிடமிருந்து அதிகம் கற்றுக்கொண்டுள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்