கடைசி ஓவரில் அசத்திய தமிழக வீரர்... திரில் வெற்றி பெற்ற இந்திய அணி!

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்தியா - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் இன்று துவங்கியது. டாஸ் ஜெயித்த அவுஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆரம்பத்திலே சொதப்ப ஆரம்பித்தது. ரோகித் சர்மா(0), ஷிகர் தவான் (21), அம்பதி ராயுடு (18) என வரிசையாக வந்த வேகத்திற்கு நடையை கட்டினர்.

இது ஒருபுறமிருக்க பொறுமையான ஆட்டத்தினை வெளிப்படுத்தி கொண்டிருந்த இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லி 120 பந்துகளில் 116 ரன்களை குவித்தார். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 250 ரன்களை குவிந்திருந்தது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஆரோன் ஃபின்ஞ்ச் 37 ரன்களும் உஸ்மான் கவாஜா 38 ரன்களும் எடுத்திருந்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார்கள்.

ஆனால் அதன்பிறகு இறங்கிய வீரகள் அனைவரும் சொதப்ப ஆரம்பித்ததால் 171 ரங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து அவுஸ்திரேலிய அணி திணற ஆரம்பித்தது. அதிகபட்சமாக பீட்டர் ஹான்சாம்கோப் 48 ரன்களும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 55 ரன்களும் எடுத்திருந்தனர்.

போட்டியின் கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் அவுஸ்திரேலிய வீரர்கள் களத்தில் இருந்தனர். அப்பொழுது பந்து வீசிய இந்திய அணியின் விஜய் சங்கர், 2 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்