உலகக் கோப்பைக்காக இந்திய அணி வீரர் புவனேஷ்வர் குமார் எடுத்த அதிரடி முடிவு! குவியும் பாராட்டு

Report Print Santhan in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு, இந்திய அணி வீரரான புவனேஷ்வர் குமார் நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் மட்டும் விளையாட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, தற்போது அவுஸ்திரேலியா அணியுடன் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடர் முடிந்தவுடன் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் துவங்கவுள்ளது. ஐபிஎல்லைத் தொடர்ந்து உலகக்கோப்பை வரவுள்ளதால், வெளிநாட்டைச் சேர்ந்த முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி காயம் ஏற்பட்டுவிட்டால், உலகக்கோப்பை தொடரில் விளையாட முடியாது என்பதால் முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து யோசித்து வருவதாக செய்தி வெளியானது.

இந்நிலையில் உலகக் கோப்பைக்கு தயாராகும் பொருட்டும், பயிற்சி எடுப்பதற்கும், உடல் நலனை கவனித்து கொள்வதற்கும் ஐபிஎல் தொடரின் முதல் பாதியை மட்டும் விளையாடப் போவதாகவும், அடுத்த பாதியில் விளையாடாமல், உலகக் கோப்பைக்காக தன்னை தயார்ப்படுத்திக் கொள்ள இருப்பதாகவும் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

புவனேஸ்வர் குமார் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும் தன் நிலை இப்படி தான் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான இவர் எடுத்துள்ள இந்த முடிவிற்கு இந்திய ரசிகர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்