அவுஸ்திரேலியாவிடம் போராடி தோற்றது இந்திய அணி: விராட்கோஹ்லி சதம் வீண்!

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

இந்தியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்த முடிந்த முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்தது.

இதனை தொடர்ந்து ராஞ்சியில் இன்று துவங்கிய மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கடும் நெருக்கடியில் களமிறங்கிய அவுஸ்திரேலியாவின் துவக்க ஆட்டக்காரர்கள் ஆரோன் பின்ச் (93), கவாஜா (104) நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.

அதனை தொடர்ந்து மேக்ஸ்வெல் 47 ரன்கள் எடுக்க 50 ஓவர்கள் முடிவில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக வந்த வேகத்திற்கு இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் தவான் (1), ரோகித் (14), அம்பதி ராயுடு (2), தோனி (26) என வரிசையாக நடையை கட்டினார்.

மறுபுறம் விராட்கோஹ்லி (126) மட்டும் நிலைத்து நின்று ஆடி சதமடித்தார். கேதர் ஜாதவ் (26), விஜய் சங்கர் (32), ஜடேஜா (24), ஷமி 8 ரன் எடுத்தனர். 48.2 வது ஓவரில் இந்திய அணி 281 ரன்கள் குவித்திருந்த போது கடைசி விக்கெட்டாக குல்தீப் (10) கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

3 வது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் 1-2 என்ற கணக்கில் தொடரில் பின்தங்கி உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்