வெறும் 45 ரன்களில் ஆல் அவுட்டான வெஸ்ட் இண்டீஸ் அணி: எளிதாக அவுட்டான கெய்ல்... வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி படுதோல்வியடைந்து தொடரை இழந்தது.

இரு அணிகளுக்கு இடையிலான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

இதையடுத்து இரண்டாவது டி20 போட்டி நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 182 ரன்கள் குவித்தது.

அந்த அணியின் ரூட் 55 ரன்களும், பில்லிங்ஸ் 87 ரன்களும் குவித்தனர்.

இதையடுத்து 183 ரன்கள் என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்தது.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணியின் வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியனுக்கு திரும்பினர்.

ஹெட்மயரும், பிராத்வெயிட்டும் இரட்டை இலக்கமான 10 ரன்களை எட்டினர்.

மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். சிக்சர் மன்னன் கெய்ல் வெறும் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

முடிவில் வெறும் 45 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து பரிதாபகரமாக ஆட்டமிழந்ததது.

இதையடுத்து, இங்கிலாந்து அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் 2-0 என் டி20 தொடரை வென்றது. ஆட்ட நாயகனாக சாம் பில்லிங்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers