டோனி இல்லை என்றால் நாங்கள் இல்லை..உருக்கமாக பேசிய இந்திய அணியின் இளம் வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்

டோனி இல்லை என்றால் நாங்கள் இல்லை என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா அணி அங்கு டி20 மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 2-1 என்று இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

இந்த தொடரில் டோனி அந்தளவிற்கு பெரிய ஆட்டம் கொடுக்காத காரணத்தினால், அவருக்கு அடுத்த இரண்டு போட்டிகளில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டோனியை ஓரங்கட்டுவதாகவும் கூறப்பட்டது.


இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப்யாதவ், இளம் வீரர்கள் அனைவரின் சிறப்பான ஆட்டத்திற்கு பின்னாலும் டோனியின் ஆலோசனைகள் நிச்சயம் இருக்கும்.

உலகின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பரை நாம் பெற்றுள்ளோம். கிரிக்கெட்டில் அவரது அனுபவங்கள் ஏராளம்.

இளம் வீரர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும், ஊக்கங்களையும் டோனி எப்பொழுதும் கொடுத்து கொண்டே இருப்பார். என்னை போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பந்துவீச்சாளர்களுக்குமே டோனியின் அறிவுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்