புஜாராவை ஏன் உயர்த்தவில்லை? ஊதிய ஒப்பந்தத்தால் வெடித்த சர்ச்சை!

Report Print Kabilan in கிரிக்கெட்

டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் புஜாராவை A+ ஒப்பந்தத்தில் சேர்க்காததால் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் இந்திய அணி வீரர்களுக்காக A+, A, B மற்றும் C ஆகிய பிரிவுகளில் ஊதிய ஒப்பந்தத்தை வெளியிடும். அதன்படி, இந்த ஆண்டுக்கான ஊதிய ஒப்பந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது பல்வேறு தரப்பில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது தற்போது வெளியிடப்பட்டுள்ள ஊதிய ஒப்பந்தப் பட்டியலில் ரூ.7 கோடி ஊதியம் வழங்கும் A+ பிரிவில் விராட் கோஹ்லி, ரோஹித் ஷர்மா, பும்ரா ஆகிய 3 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

ஆனால், சமீபத்தில் அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 3 சதங்களுடன் 521 ஓட்டங்கள் குவித்த புஜாரா, கிரிக்கெட் வாரிய ஊதிய ஒப்பந்தத்தில் A+ பிரிவில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் A பிரிவில் (ரூ.5 கோடி) தான் இடம்பெற்றுள்ளார்.

AP

இது பல தரப்பினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கிரிக்கெட் வாரிய முன்னாள் செயலாளர் நிரஞ்சன் ஷா கூறுகையில்,

‘புஜாராவுக்கு ரூ.7 கோடி சம்பளம் கிடைக்கும் A+ ஒப்பந்தம் வழங்கப்படாதது வேதனை தருகிறது. டெஸ்ட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் தராத வகையில் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக குழு செயல்பாடு உள்ளது’ என அதிருப்தி தெரிவித்துள்ளார்.

எனினும் இதுதொடர்பாக கிரிக்கெட் வாரிய வட்டாரத்தில் கூறுகையில், ‘டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் முதல் 10 இடங்களில் இடம் பெற்றவர்களுக்கு மட்டுமே A+ ஒப்பந்தம் போடப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவாதம் தேவையற்றது. ஏற்கனவே அணி நிர்வாகத்துடன் விவாதிக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வரும் புஜாராவுக்கு A+ பிரிவு கொடுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers