சச்சின்-சேவாக் சாதனையை முறியடித்த தவான்-ரோஹித் ஷர்மா கூட்டணி!

Report Print Kabilan in கிரிக்கெட்

ஒருநாள் தொடரில் சச்சின்-சேவாக் கூட்டணி நிகழ்த்திய சாதனையை ரோஹித் ஷர்மா, ஷிகார் தவான் கூட்டணி முறியடித்துள்ளது.

மொஹாலியில் நடந்துவரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரர்களான ஷிகார் தவான் மற்றும் ரோஹித் ஷர்மா இருவரும் கூட்டாக 193 ஓட்டங்கள் குவித்தனர்.

இதன்மூலம், இந்திய அணியில் அதிக ஓட்டங்கள் குவித்த 2வது ஜோடி என்ற சச்சின்-சேவாக்கின் சாதனையை தவான்-ரோஹித் ஜோடி முறியடித்துள்ளது.

சச்சின்-சேவாக் கூட்டணி 4,387 ஓட்டங்கள் குவித்த நிலையில், தவான்-ரோஹித் ஜோடி அதனை முறியடித்துள்ளது. ரோஹித் ஷர்மா 95 ஓட்டங்களில் அவுட் ஆன நிலையில், ஷிகார் தவான் சதமடித்தார்.

முதலிடத்தில் சச்சின்-கங்குலி 8,227 ஓட்டங்கள் குவித்து முதலிடத்தில் உள்ளனர். 4வது இடத்தில் ராகுல் டிராவிட்-கங்குலி(4,332 ஓட்டங்கள்) ஜோடியும், 5வது இடத்தில் ரோஹித் ஷர்மா-விராட் கோஹ்லி(4,328 ஓட்டங்கள்) ஜோடியும் உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்