விராட் கோஹ்லி ஒரு ஜோக்! இங்கிலாந்து வீரரை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

விராட் கோஹ்லி ஒரு ஜோக் என குறிப்பிட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரருக்கு எதிராக நெட்டிசன்கள் வசைபாடி வருகின்றனர்.

இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் பென் டக்கெட், கடந்த 2016ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக விளையாடியவர் அதே ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக கடைசியாக விளையாடினார்.

தற்போது உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ”விராட் கோஹ்லி இஸ்.....” என குறிப்பிட, இதை பூர்த்தி செய்யும் விதமான ”ஒரு ஜோக்” என பதிலளித்தார்.

அவ்வளவு தான் இதை பார்த்த கோஹ்லியின் ரசிகர்கள் கொந்தளித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே ஒரு சிலரோ பென் டக்கெட்டுக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers