விமர்சனங்களை எதிர்கொள்வது எப்படி? மனம் திறந்த ஷிகர் தவான்

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

தன் மீதான விமர்சனங்களை எதிர்கொள்வது குறித்து பேட்டியளித்துள்ளார் இந்திய அணி வீரரான ஷிகர் தவான்.

கடந்த ஆறு மாதங்களாக தன்னை சுற்றி வந்த சர்ச்சைகளுக்கு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் முற்றுப்புள்ளி வைத்து விட்டார் ஷிகர் தவான்.

இதுபற்றி அவர் கூறுகையில், விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என கேட்கிறீர்கள், இதற்கு முதலில் பத்திரிக்கைகளை நான் படிப்பதில்லை.

என்னை சுற்றி என்ன நடக்கிறது என எனக்கு தெரியாது, தேவையில்லாத விடயங்கள் மீது நான் கவனம் செலுத்துவதில்லை.

அமைதியான நிலையில் இருக்கும் போது நன்றாக விளையாடுவேன், மனவேதனையில் இருந்தால் ஆட்டத்தில் கவனம் செலுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

மேலும் ரிஷப் பந்தை டோனியுடன் ஒப்பிடக்கூடாது என தெரிவித்துள்ள தவான், பனியின் தாக்கமே கேட்சை தவறவிட காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers