இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி: சதமடித்து சாதனை படைத்த அவுஸ்திரேலிய வீரர்!

Report Print Kabilan in கிரிக்கெட்

டெல்லியில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், அவுஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா சிறப்பாக விளையாடி சதம் விளாசினார்.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி தற்போது டெல்லியில் நடந்து வருகிறது.

அவுஸ்திரேலிய அணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாட்டம் செய்து வருகிறது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா அபாரமாக விளையாடி 106 பந்துகளில் 10 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 100 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இது அவருக்கு இரண்டாவது ஒருநாள் சதமாகும். அதுவும் இந்த தொடரிலேயே இரண்டு சதங்களை விளாசியுள்ளார். இதன்மூலம் நான்குமுறை 50 ஓட்டங்களுக்கு மேல் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

முதல் ஆட்டத்தில் 50 ஓட்டங்கள், 2வது ஆட்டத்தில் 38 ஓட்டங்கள், 3வது மற்றும் 4வது ஆட்டங்களில் 104, 91 ஓட்டங்கள் அடித்தார்.

இந்தியா ஆடுகளங்களில் நடந்த ஒரு தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் கவாஜா படைத்துள்ளார். இதற்கு முன்பு ஏபி டி வில்லியர்ஸ் 358 ஓட்டங்கள் குவித்திருந்த நிலையில், கவாஜா 383 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்