மிக மோசமாக தோற்ற இலங்கை அணி: ஆனாலும் ஆறுதல் அளிக்கும் விதமாக செயல்பட்ட இலங்கை வீரர்

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகள் இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இலங்கை அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றி இலங்கை அணி வரலாறு படைத்து சாதித்தது.

இந்நிலையில் தற்போது ஒருநாள் தொடர் நடந்து வருகிறது.

இதன் முதல் மூன்று போட்டியில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்கா தொடரை கைப்பற்றியது.

இதையடுத்து நான்காவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 39.2 ஓவரில், 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அந்த அணியின் உதனா 78 ரன்களும், பெர்னாண்டோ 29 ரன்களும், தனஞ்சயா டி சில்வா 22 ரன்களும் எடுத்தனர்.

இதன் பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 32.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்ரிக்க அணி, 4-0 என முன்னிலை பெற்றது.

இலங்கை அணி தோல்வியடைந்தாலும் 57 பந்துகளில் 78 ரன்கள் குவித்த அந்த அணி வீரர் உதனா ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்