ஒருநாள் போட்டிகளில் சிறப்பாகவே பந்துவீசி இருக்கிறேன்.. ஆனால் வாய்ப்பு கிடைக்காததற்கு காரணம் இதுதான்! மனம் திறந்த அஸ்வின்

Report Print Kabilan in கிரிக்கெட்

ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய பந்துவீச்சு மோசமாக இருந்ததில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒருநாள் போட்டிக்கான அணியில் தெரிவு செய்யப்படவில்லை.

இந்நிலையில், Wrist சுழற்பந்துவீச்சாளர்களின் தேவை இருப்பதால் தனக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

‘அனைவரும் நினைக்கும் அளவிற்கு ஒருநாள் போட்டியில் என்னுடைய ரெக்கார்டு மோசமாக இருந்ததில்லை. Wrist சுழற்பந்து வீச்சாளர்கள் தற்போது அணிக்கு தேவைப்படுவதால் தான் எனக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.

Reuters

கடைசியாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 2017யில் விளையாடிய போட்டியில் நான் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள் எடுத்திருந்தேன். என்னுடைய முந்தைய ஆட்டங்களை எப்போதுமே நான் திரும்பி பார்ப்பது உண்டு. அதைவைத்து பார்க்கும்போது தற்போது அணியின் தேவை காரணமாகவே நான் தெரிவு செய்யப்படவில்லை.

அதற்கும் என்னுடைய ஆட்டத்திறனிற்கும் சம்பந்தமில்லை. மேலும் நான் எந்த ஒரு தனிப் பிரிவு கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்தவில்லை’ என தெரிவித்துள்ளார். மேலும் அவர் தான் அணியில் இருந்து நீக்கப்படும் பல சூழ்நிலைகளில் இருந்து டோனி தன்னை காப்பாற்றியதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers