ஆரோன் பின்ச்-யின் அபார சதத்தால் பாகிஸ்தானை துவம்சம் செய்த அவுஸ்திரேலியா!

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அவுஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் நடந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

இமாம் உல் ஹக் 17 ஓட்டங்களில் அவுட் ஆன நிலையில், ஷான் மசூட் மற்றும் ஹரிஸ் சொகைல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மசூட் 40 ஓட்டங்களில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய உமர் அக்மலும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

உமர் அக்மல் 48 ஓட்டங்களில் அவுட் ஆன நிலையில், கேப்டன் சோயிப் மாலிக் 11 ஓட்டங்களில் வெளியேறினார். மறுபுறம் நிதானமாக ஆடிய ஹரிஸ் சோகைல் ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 280 ஓட்டங்கள் எடுத்தது. சொகைல் 101 ஓட்டங்களுடனும், இமாது வாசிம் 28 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய அணி களமிறங்கியது. கவாஜா 24 ஓட்டங்களில் அவுட் ஆனார். ஆரோன் பின்ச்-ஷான் மார்ஷ் இருவரும் நங்கூரம் போல் நின்று விளையாடினார்.

அபாரமாக விளையாடிய பின்ச் சதம் விளாசினார். அணியின் ஸ்கோர் 235 ஆக உயர்ந்தபோது பின்ச் 135 பந்துகளில் 4 சிக்சர்கள், 8 பவுண்டரிகளுடன் 116 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் ஹேண்ட்ஸ்கோம்ப் களமிறங்கினார்.

இவர்கள் கூட்டணி வெற்றிப்பதைக்கு அவுஸ்திரேலியாவை அழைத்து சென்றது. இறுதியில் அவுஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 281 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷான் மார்ஷ் 91 ஓட்டங்களுடனும், ஹேண்ட்ஸ்கோம்ப் 30 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers