கோப்பையை வெல்லாத கேப்டன் என விமர்சித்த கம்பீர்! பதிலடி கொடுத்த விராட் கோஹ்லி

Report Print Kabilan in கிரிக்கெட்

ஐ.பி.எல் கோப்பையை விராட் கோஹ்லி வெல்லவில்லை என்ற கவுதம் கம்பீரின் கருத்துக்கு கோஹ்லி பதிலடி கொடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஐ.பி.எல் கோப்பையை கோஹ்லி வெல்லவில்லை என்றும், அவர் பெங்களூரு அணியின் கேப்டனாக நீடிப்பது அதிர்ஷ்டம் என்றும் விமர்சித்திருந்தார்.

அத்துடன் கோஹ்லி அணி நிர்வாகத்திற்கு நன்றி கடன்பட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் கம்பீரின் கருத்துக்கு விராட் கோஹ்லி பதிலடி கொடுக்கும் வகையில் பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘ஐ.பி.எல் கோப்பையை வெல்லவில்லை என்பது எனக்கு ஏதோ வெறுப்பை தருகிறது என்று கூறுவது தவறு. நிச்சயம் ஐ.பி.எல் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே விருப்பம்.

நான் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறேனோ அதை செய்கிறேன். ஐ.பி.எல் கோப்பையை வெல்வது அல்லது வெல்வதில்லை என்பதை வைத்து என்னை எடைபோட்டால் அதுபற்றி கவலையில்லை.

அளவுகோல்களை யாரும் நிர்ணயிக்க முடியாது. எனது வேலை சிறப்பாக ஆடுவது தான். எல்லா கோப்பைகளையும் வெல்ல வேண்டும் என்று ஆசை தான். ஆனால் பல நேரங்களில் அது நடப்பதில்லை. நாங்கள் ஏன் வெல்லவில்லை என்பதை யதார்த்தமாக யோசித்து பார்க்க வேண்டும்.

எனக்கு கேப்டன் என்ற பொறுப்பு உள்ளது. ஐ.பி.எல் கோப்பையை வெல்வது எனக்கு பிடித்தமானது தான். அதை சாதிக்க இந்த விமர்சனங்கள் உதவினால் நல்லது. நாங்கள் 5 அரையிறுதி ஆட்டங்களில் விளையாடி உள்ளோம். நாங்களும் கோப்பைக்கு அருகில் வந்துள்ளோம்.

கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணி தான். நல்ல முடிவுகளை எடுத்தால் அதனை தாண்டியும் செல்லலாம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers