சென்னை சூப்பர் கிங்ஸுடன் தோல்வியுற்றதை மறக்க விரும்புகிறோம்: விராட் கோஹ்லி

Report Print Kabilan in கிரிக்கெட்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸிடம் படுதோல்வியடைந்தது குறித்து கோஹ்லி கருத்து தெரிவித்துள்ளார்.

12வது ஐ.பி.எல் டி20 தொடர் நேற்று தொடங்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை-பெங்களூரு அணிகள் இடையிலான போட்டி நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது.

பெங்களூரு அணி 70 ஓட்டங்களுக்கு சுருண்டதைத் தொடர்ந்து, பின்னர் ஆடிய சென்னை அணி தட்டுத் தடுமாறி 17 ஓவர்கள் எடுத்துக் கொண்டு தான் வெற்றி பெற்றது. இது ரசிகர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.

விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி டி வில்லியர்ஸ், மொயீன் அலி, ஹெட்மையர், கிராண்ட்ஹோம் என வலுவான துடுப்பாட்ட வீரர்களை கொண்டிருந்த போதிலும் 70 ஓட்டங்களில் சுருண்டது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

இதனைத் தொடர்ந்து, மைதானம் சரியாக அமைக்கப்படவில்லை என கோஹ்லியும், டோனியும் குற்றம்சாட்டினர். இந்நிலையில் தோல்வி குறித்து பெங்களூரு அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறுகையில்,

‘சி.எஸ்.கே அணியிடம் அடைந்த தோல்வியை நாங்கள் மறக்க விரும்புகிறோம். சாதகமாக எடுத்துக்கொள்ள விரும்புகிறோம். தொடக்கத்திலேயே இதுபோன்ற மோசமான தோல்வியை அடைந்தது நல்லதுதான். இதன்மூலம் நாங்கள் விழித்துக்கொள்வோம்.

நாங்கள் பேட்டிங் மோசமாக செய்தாலும், இந்தப் போட்டியை நாங்கள் எங்களால் முடிந்தவரை கடினமாக 18வது ஓவர் வரை கொண்டு சென்றுதான் தோல்வி அடைந்தோம். இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்ய முடியாமல் சிரமப்பட்டோம்.

பேட்டிங்கும் செய்வதும் எளிதானது அல்ல. இன்னும் ஆடுகளம் சிறப்பாக அமைக்கப்பட்டு இருக்கலாம். நாங்கள் 150 ஓட்டங்கள் வரை எடுப்போம் என்று நினைத்தோம், ஆனால் முடியவில்லை.

ஒருவேளை 120 ஓட்டங்கள் சேர்ந்திருந்தால், நாங்கள் வெற்றி பெற்று இருப்போம். 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இன்று அணியில் இருந்தும் சிறப்பாகப் பந்துவீசினார்கள். குறிப்பாக நவ்தீப் சைனி நன்றாகப் பந்துவீசினார்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers