மலிங்கா வீசிய நோ-பால்... கவனிக்காத நடுவர்கள்.... கொந்தளித்த பெங்களூர் அணி ரசிகர்கள்

Report Print Raju Raju in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்ற நிலையில் அந்த அணி வீரர் மலிங்கா வீசிய நோ பாலை, அம்பயர் கவனிக்காமல் விட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் 12வது தொடர் தற்போது துவங்கி நடந்து வரும் நிலையில் நேற்றைய போட்டியில் பெங்களூர் - மும்பை அணிகள் மோதின.

இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் மலிங்கா வீசிய கடைசி பந்தை டுபே எதிர்கொண்டார். அதில் அவர் ஒரு ரன் எடுக்க, மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் ரீப்ளேவில் பார்த்த போது மலிங்கா வீசிய கடைசி பந்து நோ-பால் என தெரியவந்தது. இதையடுத்து பெங்களூரு கேப்டன் கோஹ்லி அம்பயர்களிடம் கேட்டபோது, போட்டி முடிவை மாற்ற முடியாது என தெரிவித்ததால் அவர் கடுப்பானார்.

இந்நிலையில் பெங்களூரு அணி ரசிகர்கள், கடைசி பந்தில் வெற்றி வாய்ப்பு இருந்தும் அம்பயர்களின் அலட்சியத்தால், இது போன்ற தேவையில்லாத தோல்வியை சந்திக்க நேர்ந்தது என டுவிட்டரில் கொந்தளித்து வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்