8 ஆண்டுகளில் முதல் முறையாக தோல்வியை சந்தித்த மும்பை அணி

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்

பேட்டிங்கிற்கு சாகமான மொஹாலி மைதானத்தில் மும்பை அணி 8 ஆண்டுகளில் முதல் முறையாக தோற்றுள்ளது அவர்களது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மொஹாலி நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை, பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது.

முதலில் களமிறங்கிய மும்பை அணிக்கு ஓப்பனிங் சிறப்பாக அமைந்தது. ரோஹித் ஷர்மா, குயிண்டன் டி காக் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் உதவியுடன் 20 ஓவர்களில் மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது.

பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக முருகன் அஷ்வின், ஹர்தஸ், ஷமி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

177 ரன்கள் எடுத்தால் இரண்டாவது வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் சிறப்பான அடித்தளம் அமைத்துக்கொடுத்தார்.

மும்பை அணி தரப்பில் குர்னால் பாண்டியா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

2011-ம் ஆண்டுக்குப் பிறகு மொஹாலி மைதானத்தில் மும்பை அணி தோற்பது இதுவே முதல் முறையாகும்.

இதுவரை மொஹாலி மைதானத்தில் வெற்றியை சந்தித்த மும்பை அணி கடந்த 8 ஆண்டுகளில் முதல் முறையாக தோல்வியை சந்தித்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்