ஐபிஎல் வரலாற்றில் 100வது வெற்றியை பதிவு செய்த மும்பை அணி! புதிய சாதனை

Report Print Kabilan in கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பெற்ற வெற்றியின் மூலம், ஐ.பி.எல் தொடரில் 100வது வெற்றியைப் பெற்ற முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

இது மும்பை அணி ஐ.பி.எல்-யில் பெற்ற 100வது வெற்றியாகும். இதன்மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் 100 வெற்றிகளைப் பெற்ற முதல் அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் பெற்றுள்ளது.

மொத்தம் 175 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி, 100 போட்டிகளில் வெற்றியும், 75 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. இந்த அணியின் வெற்றி சதவிதம் 56.85 ஆகும்.

மும்பை அணிக்கு அடுத்த இடத்தில் 93 வெற்றிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(88), கிங்ஸ் லெவன் பஞ்சாப்(79) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(79) ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்