நான் வீட்டில் தான் உட்கார வேண்டும்: தோல்விக்கு சாடிய கம்பீருக்கு பதில் கொடுத்த கோஹ்லி

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்

ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து 6வது முறையாக தோல்வியை சந்தித்துள்ளது கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி.

பெங்களூ அணியில் தொடர்ந்து கேப்டனாக இருந்து வரும் விராட் கோஹ்லி ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை கைப்பற்றவில்லை என்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கோஹ்லியின் திறமையை விமர்சித்து பேசியுள்ளார் வீரர் கவுதம் கம்பீர். அவர் கூறியதாவது, கோஹ்லியை தனது திறமையை இன்னும் வளர்த்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து பெங்களூர் அணியின் கேப்டனாக கோஹ்லியை வைத்திருப்பதற்கு அவர் தான் நன்றி தெரிவிக்க வேண்டும்.

மேலும், பந்து வீச்சாளர்கள் மீது சாடுவதை விட்டுவிட்டு, தோல்விக்கு காரணத்தை அவரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தொடர் தொடங்கும்போது மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் நாதன் கவுல்டர்-நைல் ஆகியோரால் விளையாட முடியாது என்பது தெரிந்தும், ஏன் அவர்களை தேர்வு செய்தார்கள்.

இதுவே, பெங்களூர் அணி சறுக்குவதற்கான காரணம் என கூறியுள்ளார். கவுதமின் கருத்துக்கு பதிலளித்துள்ள கோஹ்லி, வெளியில் உள்ள நபர்கள் கூறியதை கருத்தில் கொண்டால், நான் வீட்டில்தான் உட்கார்ந்திருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்