ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம்! சிக்கிய 9 பேர்.... கைப்பற்றப்பட்ட மொத்த பணம் எவ்வளவு?

Report Print Raju Raju in கிரிக்கெட்

ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில் அவர்களிடமிருந்து ரூ.3.86 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

12-வது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். போட்டிகளின் போது சூதாட்ட புகார் எழுந்து வருகிறது. பொலிசாரும் சூதாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் பொலிசார் நடத்திய அதிரடி சோதனையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சோதனையின்போது லேப்டாப், 20 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் ரூ.3.86 லட்சம் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஐ.பி.எல் போட்டி தொடங்கிய சில நாட்களிலேயே சூதாட்டம் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers