பில்டப் மேல் பில்டப்: கோஹ்லி அணியை தோல்வியில் இருந்து மீட்டெடுப்பாரா டேல் ஸ்டெய்ன்

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்

இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி மற்றும் அஸ்வின் தலைமையிலான பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

7 ஆட்டங்களில் விளையாடி 4–ல் வெற்றி பெற்றுள்ளது பஞ்சாப் அணி. விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் இதுவரை ஆடியுள்ள 6 ஆட்டங்களிலும் தோல்வியே சந்தித்துள்ளது.

இந்நிலையில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் கவுல்டர் நிலே காயம் காரணமாக விலகினார்.

இந்த நிலையில் அவருக்கு பதிலாக தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயினை பெங்களூரு அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஸ்டெயின் 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஐ.பி.எல். போட்டிக்கு திரும்புகிறார்.

இந்த அறிவிப்பை நேரடியாக வெளியிடாமல் பயங்கர பில்டப் செய்தது பெங்களூர் அணி. முதலில் ஸ்டெய்ன் தன் இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்திய விசா புகைப்படத்தை வெளியிட்டு, சின்ன ஆச்சரியம் என குறிப்பிட்டு இருந்தார்.

பின்னர், பெங்களூர் அணி தன் ட்விட்டர் கணக்கில் பார்த்து ரொம்ப நாளாச்சு.. என டேல் ஸ்டெய்ன் என்ற பெயரை எழுதி அதை தெளிவாக பார்க்க முடியாத வகையில் அடித்து இருந்தது.

தற்போது ஸ்டெயின் தங்கள் அணியில் இணையப்போவதை நேரடியாக அறிவித்துள்ளது பெங்களூர் அணி.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers