உலகக்கோப்பைக்கு இந்திய அணியில் இந்த தமிழக வீரர் கண்டிப்பாக இருக்க வேண்டும்..தென் ஆப்பிரிக்கா வீரர் காலிஸ் சொன்ன காரணம்

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடரில் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக்கை சேர்க்க வேண்டும் என்று தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான ஜாக் காலிஸ் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடர் வரும் வரும் மே மாதம் 30-ஆம் திகதி துவங்கி, ஜுலை 14-ஆம் திகதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

இதற்கான வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு நாடும் அறிவித்து வருகிறது. இதில் முதல் ஆளாக நியூசிலாந்து அணி உலகக்கோப்பையில் விளையாடும் 15 பேர் கொண்ட அணியை வெளியிட்டது.

இந்திய அணி வரும் 15-ஆம் திகதி வெளியிடவுள்ளது. இதில் உலகக்கோப்பைக்கு ஆடும் இந்திய அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் 4-ஆம் இடத்திற்கான வீரர்களின் தேர்வு தான் இப்போது தேர்வு குழுவினருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வரை 4-வது இடத்தில் ராயுடு உட்பட பலரை மாற்றிப் பார்த்தும் சரியான வீரர்கள் அமையவில்லை.

கோஹ்லி, ரோகித் சர்மா, தவான், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, சாஹல்/ குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி ஆகியோர் இடம்பெறுவது உறுதியாகிவிட்ட நிலையில் மாற்று விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன்களாக ரிஷாப் பன்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவரை சேர்க்கப் போட்டி நிலவுகிறது.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக சேர்க்கப்பட கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு இருக்கிறது. இதுதவிர, கலீல் அகமது, குணால் பாண்ட்யா உட்பட சிலருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

இந்நிலையில் இப்போதுள்ள நிலையில் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கைக் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரும் கொல்கத்தா அணியின் பயிற்சியாளருமான ஜாக் காலிஸ் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், உலகக் கோப்பை போட்டிக்கு அனுபவம் உள்ள வீரர் தேவை. தினேஷ் கார்த்திக் அனுபவம் வாய்ந்தவர். அ

தோடு மிடில் ஆர்டரில் சிறப்பாக, பந்துகளை அதிகம் வீணாக்காமல் விளையாடக் கூடியவர். அந்த இடத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பதை அறிந்தவர்.

இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் பெரிய தொடரில் பங்கேற்கும் போது அனுபவ வீரர்கள்தான் தேவை. அதனால் அவரை சேர்க்க வேண்டும். அவரை சேர்க்காமல் விட்டால் அது வேடிக்கையாக ஆகிவிடும். நான் தேர்வாளராக இருந்தால் அவரை அணியில் சேர்ப்பேன் என்று கூறியுள்ளார்.


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers