வெட்கமில்லாமல் டோனியை விமர்சிப்பதற்கு தயங்குது ஏன்? பிஷன் சிங் பேடி விளாசல்

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்

ஜெய்ப்பூரில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில், நோ பால் விவகாரம் தொடர்பாக நடுவரிடம் டோனி வாக்குவாதத்தில் ஈடுபட்டதை விமர்சிப்பதற்கு ஊடகங்கள் ஏன் அஞ்சுகின்றன என இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் பிஷன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, மைதானத்தில் டோனி முதிர்ச்சியற்ற வகையில் நடந்துகொண்டார். ஆனால், மிகப்பெரிய கிரிக்கெட் நட்சத்திரங்கள் என்பதால் அவர்கள் செய்யும் தவறுகளை ஊடகங்கள் நேர்மையாக சுட்டிக்காட்டாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மேலும், வெட்கமில்லாமல் அதிகாரிகள் கூட 50 சதவிகிதம் தான் டோனிக்கு அபராதம் விதித்துள்ளனர். அவருக்கு மட்டும் ஏன் சிறப்பு சலுகை. கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் என அனைவருக்கும் ஒழுக்கம் அவசியம் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers