முதல் வெற்றியை ருசித்த பெங்களூரு அணி: உற்சாகத்தில் துள்ளிக்குதித்த விராட்!

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையேயான போட்டியானது மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து 173 ரன்களை குவிந்திருந்தது.

பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக துவக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் 64 பந்துகளில் 99 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பெங்களூரு அணி சார்பில் சாஹால் 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 1 விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியின் துவக்க ஆட்டக்கார்கள் பார்திவ் படேல் மற்றும் விராட்கோஹ்லி ஆரம்பம் முதலே நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.

19 ரன்கள் எடுத்திருந்த போது பார்திவ் படேல் அவுட்டாகி வெளியேற, விராட்கோஹ்லியுடன் கூட்டு சேர்ந்த டி வில்லியர்ஸ் அதிரடி காட்ட ஆரம்பித்தார்.

கடைசி ஓவரில் 6 ரன் தேவை என்ற நிலையில், மார்கஸ் ஸ்டோனெனிஸ் முதல் 2 பந்துகளில் தேவையான ரன்களை குவித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

பெங்களூரு அணியில் அதிகபட்சமாக விராத் கோஹ்லி 67 ரன்களும், டி வில்லியர்ஸ் 59 ரன்களும் குவிந்திருந்தனர்.

இதன் மூலம் நடப்பு ஐபில் தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத பெங்களூரு அணி, தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers