நாங்களும் ஜெயிச்சிட்டோம்: அரைசதம் அடித்த கோஹ்லி

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்

நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் பஞ்சாப் அணியுடன் மோதிய பெங்களூர் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் அந்த அணியின் கேப்டன் கோஹ்லி தனது அரைசதத்தை கடந்துள்ளார்.

ஐபிஎல் போட்டி தொடங்கியதில் இருந்து ஒரு வெற்றியை கூட கண்டிதாக பெங்களூர் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் கோஹ்லியின் அபார ஆட்டத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

அபாரமாக ஆடிய கோஹ்லி 37 பந்தில் அரைசதம் அடித்தார். பெங்களூர் அணி 85 ரன்கள் எடுத்திருந்தபோது ஷமியின் பந்துவீச்சில் 67 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் கோஹ்லி.

கோஹ்லிக்கு கைகொடுத்து டிவில்லியர்ஸ்ம் அரைசதம் கடந்தார்.

கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவை என்ற போது ஒரு பவுண்டரியும், 2 ரன்களும் எடுத்து முதல் வெற்றியை பெற்றது பெங்களூரு. ஆட்ட நாயகனாக டி வில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

பெங்களூர் அணியின் முதல் வெற்றியால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். இனிவரும் போட்டிகளிலும் இந்த ஆட்டம் தொடரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers