பஞ்சாப்-பெங்களூரு போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்த கெய்ல்-டிவில்லியர்ஸ்! அரங்கமே அதிர்ந்த வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

நேற்றைய ஐபிஎல் தொடரின் போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணி வீரர்கள் அதிரடி காட்டியதால், சிக்ஸர்கள் பறந்தன.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின, இந்த தொடரில் எந்த வெற்றியையும் பதிவு செய்யாத பெங்களூரு அணி நேற்றைய வெற்றியின் மூலம் முதல் வெற்றியை பதிவு செய்தது.

இப்போட்டியில் பஞ்சாப் அணி சார்பில் கெய்ல் 64 பந்துகளில் 99 ஓட்டங்களும், பெங்களூரு அணி சார்பில் கோஹ்லி 53 பந்துகளில் 67 ஓட்டங்களும் டிவில்லியர்ஸ் 38 பந்துகளில் 59 ஓட்டங்களும் எடுத்தனர்.

இவர்கள் ருத்ரதாண்டவம் ஆடிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த போட்டியின் முடிவு மூலம் பஞ்சாப் அணி 8 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றியும், 4-ல் தோல்வியுடன் 5-வது இடத்திலும், பெங்களூரு அணி 7 போட்டிகளில் 1 வெற்றியும், 6 தோல்வியுடன் கடைசி இடத்தில் உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers