கோஹ்லிக்கு வந்த சோதனை: 12 லட்சம் ரூபாய் அபராதம்

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்திருந்தாலும் அந்த அணியின் கேப்டன் கோஹ்லியால் வெற்றியை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆட்டத்தை மந்தமாக்கி ஓவர்களை குறித்த நேரத்தில் வீசி முடிக்காத காரணத்தால் கேப்டன் கோஹ்லிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதே நிலை தொடர்ந்தால் கோஹ்லிக்கு தடை விதிக்கும் வாய்ப்பும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடந்துவரும் ஐபிஎல் போட்டியில் ரோஹித் சர்மா, ரஹானே, டோனி, கோஹ்லி ஆகிய 4 கேப்டன்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதில், ரோஹித் சர்மா, ரஹானே மற்றும் கோஹ்லி ஆகிய மூன்று பேருக்கும் குறித்த நேரத்தில் ஓவர்களை வீசாமல் ஆட்டத்தை மந்தமாக்கியதற்கும், டோனிக்கு விதியை மீறிய நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காகவும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்