இந்த ஐபிஎலில் தொடர்ந்து 6 தோல்வி முதல் வெற்றி பெற்ற பெங்களூரு..உணர்ச்சிகரமாக பேசிய டிவில்லியர்ஸ்

Report Print Santhan in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்ற நிலையில், இந்த வெற்றி தொடரும் என்று அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.

இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரு வெற்றி கூட பெறாத பெங்களூரு அணி, நேற்றைய போட்டியில் பஞ்சாப்பை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

இதனால் பெங்களூரு அணி வீரர்கள் மட்டுமின்றி, அந்தணியின் ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த வெற்றி குறித்து அந்தணியின் அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் கூறுகையில், இந்த வெற்றிக்காக நீண்ட காலமாக காத்திருந்தோம், தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இது சரியான திசையில் செல்வதற்கான முதல் படி. இதே நிலையை வரும் போட்டிகளிலும் தொடர்வோம். இந்த வருடத்தில் 10-11 மாதங்கள் நான் கிரிக்கெட் ஆடவில்லை, இதன் காரணமாக முதல் சில போட்டிகளில் தடுமாற்றம் இருந்தது. அதனை வெளிக்கொணர முயற்சித்தேன். கடுமையான பயிற்சியால் இப்போது இது மீண்டும் சாத்தியம் ஆனது. இந்த வெற்றியை நிச்சயம் பராமரிப்போம் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்