உலகக் கோப்பைக்கான மிரட்டலான அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு!

Report Print Kabilan in கிரிக்கெட்

தடையில் இருந்த வார்னர்-ஸ்மித் அணிக்கு மீண்டும் திரும்பிய நிலையில், உலகக் கோப்பைக்கான அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் அடுத்த மாதம் உலகக் கோப்பை தொடங்க உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜாம்பவான் அணியான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் தடை விதிக்கப்பட்ட டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் இடம்பிடித்துள்ளனர். இதன்மூலம் அந்த அணியின் துடுப்பாட்டத்தின் பலம் அதிகரித்துள்ளது.

அதே போல் பந்துவீச்சில் மிரட்ட ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ரிச்சர்ட்சன் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர். அணித்தலைவராக ஆரோன் பின்ச் நியமிக்கப்பட்டுள்ளார்.

வார்னர் மற்றும் ஸ்மித் இருவருமே நல்ல ஃபார்மில் உள்ளதால், அவர்களது வருகை அவுஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசல்வுட் ஆகிய முக்கிய வீரர்கள் உலகக் கோப்பை அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அணி விபரம்
 • ஆரோன் பின்ச்
 • டேவிட் வார்னர்
 • ஸ்டீவ் ஸ்மித்
 • உஸ்மான் கவாஜா
 • ஷான் மார்ஷ்
 • அலெக்ஸ் கேரி
 • மேக்ஸ்வெல்
 • மார்க் ஸ்டோனிஸ்
 • ரிச்சர்ட்சன்
 • நாதன் கவுல்டர் நைல்
 • பெகண்ட்ரோஃப்
 • நாதன் லயன்
 • பேட் கம்மின்ஸ்
 • மிட்செல் ஸ்டார்க்
 • ஆடம் சம்பா

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers