கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய பாண்டியா: மீண்டும் வீழ்ந்த பெங்களூரு!

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

மும்பை அணிக்கெதிரான போட்டியில் மீண்டும் பெங்களூரு அணி தோல்வியை தழுவியுள்ளது.

ஐபிஎல் தொடரில் 31 வது லீக் போட்டியில் ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட்கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணியும் மோதின.

இதில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித்சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை குவித்தது.

பெங்களூரு அணியில் அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் 75 ரன்களும், மோயீன் அலி 50 ரன்களும் அடித்திருந்தனர். மும்பையில் அணியில் லசித் மலிங்கா 4 விக்கெட்டுகளையும், ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப், ஹார்டிக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து பேட்டிங் செய்த மும்பை அணியின் துவக்க ஆட்டக்கார்கள் ரோஹித் சர்மா 28 (19), குவிண்டன் டிக் காக் 40(26) ஆகியோர் நல்ல துவக்கம் கொடுத்தனர்.

இவர்களை தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷன் 9 பந்துகளில் 21 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விளையாடிய வீரர்கள் அதிரடி காட்டியதால் 19 ஓவர்களில் மும்பை அணி 172 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. மும்பை அணியில் அதிரடியாக விளையாடிய ஹர்டிக் பாண்டியா 16 பந்துகளில் 37 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

பெங்களூரு அணியில் சாஹல், மொயின் அலி ஆகியோர் 2 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers