உலகக் கோப்பையில் இந்த வரிசையில் கோஹ்லி களமிறங்க கூடாது! பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் கருத்து

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் உலகக் கோப்பை போட்டிகளில் நான்காவதாகக் களமிறங்கினால் அது தனக்கு ஏமாற்றமாக இருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகரும், வர்ணனையாளருமான ஹர்ஷா போக்ளே கருத்து தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடக்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது.

ஆனால், 15 பேர் கொண்ட அணியில் ரிஷாப் பண்ட், அம்பத்தி ராயுடு தெரிவு செய்யப்படாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அணித்தேர்வு குறித்து கிரிக்கெட் விமர்சகரும், வர்ணனையாளருமான ஹர்ஷா போக்ளே கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘தினேஷ் கார்த்திக்குக்கு உலகக் கோப்பை அணியில் இடமுள்ளது என்ற பேச்சுகளே நிலவி வந்தன. ஆனால் முறையாக அறிவிக்கப்படும் வரை எதுவும் நிச்சயமில்லை. எப்படி இருந்திருந்தாலும் ஒரு கீப்பருக்கு இது மனவருத்தமே. மற்றபடி மீதமுள்ள அணித்தேர்வு எதிர்பார்த்த ஒன்றே.

கோஹ்லியை நான்காவதாக களமிறங்கினால் என்னளவில் அது ஏமாற்றமே. ஏனென்றால் அவரது நிலையில் அவர் மிகச்சிறந்த வீரர். சரியாக ஆடாதவர்களுக்காக அவரைப் போன்ற ஆட்ட நாயகர்கள் ஆடும் நிலையை மாற்றக் கூடாது.

சில போட்டிகளில் இந்தியா 3 வேகப்பந்து வீச்சாளர்களை வைத்தும் விளையாட வேண்டியிருக்கலாம். ஆனால் பெரும்பாலும் 2 வேகப்பந்து வீச்சு, 2 சுழற்பந்து வீச்சு என அணி இருக்கும் என நினைக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers