எனக்கு அந்த திறமை உள்ளது! தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நம்பிக்கை

Report Print Kabilan in கிரிக்கெட்

உலகக் கோப்பை போட்டியில் 4வது வரிசையில் விளையாடக்கூடிய திறமை தன்னிடம் இருப்பதாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் அடுத்த மாதம் தொடங்க உள்ள உலகக் கோப்பை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. அதில் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் ஷங்கர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

ஏற்கனவே டோனி விக்கெட் கீப்பராக செயல்படும் நிலையில், தினேஷ் கார்த்திக் இடம்பிடித்திருப்பது அவர் துடுப்பாட்ட வீரராக தனது திறமையை காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

AFP

இந்நிலையில், அணியில் தெரிவு செய்யப்பட்டது குறித்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கூறுகையில், ‘உலகக் கோப்பை மிகப்பெரிய போட்டி. இதற்கான அணியில் இடம்பெறுவதை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தேன்.

உலகக் கோப்பைக்கு தெரிவு செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அனைத்து போட்டிகளிலும் டோனிதான் விக்கெட் கீப்பராக இருப்பார். புகைப்படத்தில் மட்டுமே எனது படம் வரும். அவர் காயம் அடைந்தால் வாய்ப்பு வரும்.

சிறந்த துடுப்பாட்ட வீரராக வாய்ப்பு அளிக்கப்படும். 4வது வரிசையில் விளையாடக்கூடிய திறமை என்னிடம் இருக்கிறது. பின்வரிசையில் ஆடினாலும் என்னால் ஆட்டத்தை நிறைவு செய்ய முடியும்.

உலகக் கோப்பை போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அணி திறமை வாய்ந்தது. நாங்கள் சிறப்பாக ஆடுவோம்’ என தெரிவித்துள்ளார். அதேபோல் மற்றொரு தமிழக வீரரான விஜய் ஷங்கர், உலகக் கோப்பை அணிக்கு தேர்வாகி இருப்பதன் மூலம் தங்களது கனவு நனவாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers