ஐபிஎல்-யில் புதிய சாதனை படைத்த ஷிகர் தவாண்!

Report Print Kabilan in கிரிக்கெட்

பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், ஐ.பி.எல்-யில் அதிக பவுண்டரிகள் விளாசிய வீரர் என்ற சாதனையை ஷிகர் தவாண் படைத்தார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் லீக் போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

டெல்லி அணி வீரர் ஷிகர் தவாண் 41 பந்துகளில் 56 ஓட்டங்கள் விளாசினார். இதில் ஒரு சிக்சர், 7 பவுண்டரிகள் அடங்கும். இதன்மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் அதிக பவுண்டரிகள் விளாசிய வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்தார்.

இதுவரை 153 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடியுள்ள தவாண், 502 பவுண்டரிகள் மற்றும் 91 சிக்சர்கள் அடித்துள்ளார். அத்துடன் 4404 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்