தசைப்பிடிப்பிலிருந்து மீண்டு வந்த டோனி! வைரலாகும் சிக்சர் வீடியோ

Report Print Kabilan in கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் டோனி, பயிற்சியின் போது சிக்சர் அடித்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

முதுகுப் பகுதியில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் டோனி, ஹைதராபாத் அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் பங்கேற்கவில்லை.

அவருக்கு பதிலாக ரெய்னா அணித்தலைவராக செயல்பட்டார். ஆனால், சென்னை அணி அந்தப் போட்டியில் தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து, அடுத்தப் போட்டியில் டோனி பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், அவர் வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ டோனி சிக்சர் விளாசுகிறார். இதன்மூலம் அவர் நல்ல உடல் தகுதியுடன் இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை அணி இன்று இரவு நடக்கும் போட்டியில் பெங்களூரு அணியை சந்திக்கிறது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்