டோனி இல்லாமல் சென்னை அணி வெற்றி பெறுவது கடினம்: பயிற்சியாளர் பிளம்மிங்

Report Print Kabilan in கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டோனி இல்லாமல் வெற்றி பெறுவது கடினம் என, அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிராக, கடந்த 17ஆம் திகதி நடந்த லீக் போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்தது. அந்தப் போட்டியில் முதுகு வலி காரணமாக டோனி விளையாடவில்லை. அவருக்கு பதிலாக சுரேஷ் ரெய்னா அணித்தலைவராக செயல்பட்டார்.

சென்னை அணி இன்று நடைபெற உள்ள தனது 10வது லீக் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் டோனி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், டோனி விளையாடுவது குறித்து அணியின் பயிற்சியாளர் பிளம்மிங் கருத்து தெரிவித்துள்ளார்.

HT

அவர் டோனி இல்லாமல் வெற்றி பெறுவது கடினம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘டோனி மிக சிறந்த வீரர். அவரைப் போன்ற வீரர் அணியில் விளையாட இயலாமல் போனால், அதை சரி கட்ட உங்களுக்கு மிகப்பெரிய வேலையாக இருக்கும்.

தற்போது அவர் சிறந்த பார்மில் உள்ளார். இதனால் அணியில் சற்று பாதிப்பை ஏற்படுத்ததான் செய்யும். ஆனாலும் அதை சரி கட்டுவது அவசியம். டோனி இல்லாமல் வெற்றி பெறுவது கடினமான விடயம் தான். பெங்களூர் மைதானத்தில் நடக்கும் போட்டியில் அதிக ஓட்டங்கள் குவிப்பு ஆட்டமாக இருக்கும் என்று கருதுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்