கோஹ்லிக்கு கடைசி ஓவரில் தோல்வி பயத்தை காட்டிய டோனி.. ஒரு ஓட்டத்தி த்ரில் வெற்றி பெற்ற பெங்களூரு

Report Print Santhan in கிரிக்கெட்

சென்னை அணிக்கெதிரான போட்டியில் பெங்களூரு அணி ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணியும், டோனி தலைமையிலான சென்னை அணியும் மோதின.

அதன் பின் முதலில் ஆடிய பெங்களூரு அணிக்கு துவக்க வீரர் பார்த்தீவ் பட்டேலை தவிர மற்ற வீரர்கள் சொதப்ப, இறுதியாக அந்தணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் எடுத்தது.

பெங்களூரு அணி சார்பில் அதிகபட்சமாக பார்த்தீவ்பட்டேல் 37 பந்துகளில் 53 ஓட்டங்களும் மோயின் அலி 16 பந்துகளில் 26 ஓட்டங்களும் எடுத்தனர்.

அதன் பின் 162 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு துவக்க வீரரான ஷேன் வாட்சன் 5, ரெய்னா டக் அவுட், டூப்ளிசிஸ் 5 என வந்த வேகத்தில் பவுலியன் திரும்ப, டோனி தனி ஒருவனாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

ஒரு கட்டத்தில் சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 26 ஓட்டங்கள் தேவை என்பதால், சென்னை அணி தோற்றுவிடும் என்று நினைத்த போது, டோனி தன்னுடைய விஸ்வரூப ஆட்டத்தை காட்ட அந்த ஓவரில் மட்டும் 24 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது.

இதில் முதல் பந்தில் பவுண்டரி, அடுத்த இரண்டு பந்தில் சிக்ஸர் நான்காவது பந்தில் பவுண்டரி, ஐந்தாவது பந்தில் 2 ஓட்டம் என்ற எடுத்தால், கடைசி பந்தில் இரண்டு ஓட்டங்கள் தேவைப்பட்டது.

ஆனால் கடைசி கடைசி பந்தை உமேஷ் யாதவ் தன்னுடைய வேகத்தை குறைத்து வீசியதால், பந்தானது டோனியை ஏமாற்றி கீப்பரிடம் செல்ல, பட்டேல் அற்புதமாக பிடித்து ரன் அவுட் செய்தார்.

இதனால் இந்த போட்டியின் கடைசி பந்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்