ஐபிஎல் போட்டியில் பிரம்மாண்ட சாதனை படைத்த டோனி!

Report Print Kabilan in கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் டோனி, ஐ.பி.எல் போட்டிகளில் 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதின. முதலில் ஆடிய பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 161 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணியில் கடைசி வரை போராடிய டோனி 48 பந்துகளில் 7 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 84 ஓட்டங்கள் குவித்தார்.

இதன்மூலம், ஐ.பி.எல் போட்டிகளில் 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை டோனி படைத்தார். நேற்றைய போட்டியில் 7 சிக்சர்கள் விளாசியதுடன் சேர்த்து மொத்தம் 203 சிக்சர்கள் அடித்துள்ளார்.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்