டோனி எங்களுக்கு மிகப்பெரிய பயத்தை காட்டிவிட்டார்! மிரண்ட கோஹ்லி

Report Print Kabilan in கிரிக்கெட்

கடைசி ஓவரில் டோனி தங்களுக்கு மிகப்பெரிய பயத்தை காட்டிவிட்டதாக பெங்களூரு அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில் பெங்களூரு அணி ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது. பெங்களூரு அணி நிர்ணயித்த 162 ஓட்டங்கள் இலக்கினை சென்னை அணி விரட்டியது. ஆனால், 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை சென்னை அணி பறிகொடுத்தது. பின்னர் ராயுடு ஓரளவுக்கு கைகொடுக்க, டோனி அதிரடியில் மிரட்டினார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 26 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை எதிர்கொண்ட டோனி 3 சிக்சர்கள், ஒரு பவுண்டரி என 24 ஓட்டங்கள் விளாசினார். ஆனால், தாக்கூர் கடைசி பந்தில் ரன்-அவுட் ஆனதால், சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.

BCCI

அணியில் கடைசி வரை களத்தில் இருந்த டோனி 48 பந்துகளில் 84 ஓட்டங்கள் குவித்தார். இந்நிலையில், டோனி கடைசி ஓவரில் தங்களுக்கு பயத்தை காட்டியதாக விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,

‘போட்டி முழுவதும் உணர்ச்சிகளால் நிரம்பி இருந்தது. 19வது ஓவர் வரை நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம். கடைசி ஓவரில், கடைசி பந்தில் நடந்த ரன்-அவுட் நடக்கும் என்று நான் எதிர்பார்த்தேன். அதுபோல் நடந்துவிட்டது.

சிறிய அளவு ரன் வித்தியாசத்தில் போட்டியில் வென்றாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எம்.எஸ்.டோனி தன்னால் என்ன சிறப்பாக செய்ய முடியுமோ, அடிக்க முடியுமோ அடித்தார். எங்கள் ஒட்டும்மொத்த அணிக்கும் டோனி மிகப்பெரிய பயத்தை காட்டிவிட்டார்’ என தெரிவித்துள்ளார்.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்