பந்துகளை பறக்கவிட்ட ரிஷப் பண்ட்: புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி அணி!

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரின் 40வது லீக் போட்டியானது ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து 191 ரன்களை குவித்தது.

ராஜஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ரகானே 105 ரன்களும், ஸ்மித் 50 ரங்களும் குவிந்திருந்தனர். டெல்லி அணியில் கஜிஸோ ரபாடா 2 விக்கெட்டுகளையும், கிறிஸ் மோரிஸ், இஷாந்த் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர்.

192 என்கிற கடினமான இலக்கு நோக்கி களமிறங்கிய டெல்லி அணியின் துவக்க ஆட்டக்காரர் தவான் 54 ரன்களில் அவுட்டாகி வெளியேற அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் (4) வந்த வேகத்தில் வெளியேறினார்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த பிரித்வி ஷா, பண்ட் ஜோடி பந்துகளை அடிக்கடி எல்லை கோட்டிற்கு அனுப்பி கொண்டே இருந்தது.

டெல்லி அணியின் வெற்றிக்கு 12 பந்தில் 17 ரன்கள் தேவைப்பட்டது. ரிஷப் பண்ட் காட்டிய அதிரடியால் அணி 19.2 பந்துகளில் வெற்றியை சுவைத்தது.

டெல்லி அணி சார்பில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் 78 ரன்களை குவித்தார். ராஜஸ்தான் அணியில் ஷிரியாஸ் கோபால் 2 விக்கெட்டுகளையும், ரியான் பாராக், தவால் குல்கர்னி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 11 போட்டிகளில் 7 வெற்றியுடன் டெல்லி அணி முதலிடம் பிடித்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்