ஐபிஎல் போட்டிக்கு நடுவே நேரலையில் கெட்ட வார்த்தை பேசிய ராகுல்

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்

42வது லீக் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணியில் ஏழு பந்துவீச்சாளர்களை சுழற்சி முறையில் கோஹ்லி பயன்படுத்தியதால், யாருடைய ஓவர்களில் அடித்து ஆடலாம் என பஞ்சாப் அணி வீரர்கள் திட்டமிட முடியாத வகையில் குழம்பியதால் அதனை சாதகமாக வைத்து பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தின் போது பஞ்சாப் அணி வீரர் ராகுல் மைக்கில் கெட்ட வார்தை பேசியுள்ளார். வர்ணனையாளருடன் இணைந்து பேசிக்கொண்டிருந்த ராகுல், எதிரணியான பெங்களூர் வீரர் பர்திவ் படேல், ஃபோர் அடித்ததை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு கெட்ட வார்த்தை பேசியுள்ளார்.

சுமார், 20 நிமிடம் கழித்துதான் அவர் தான் கெட்ட வார்த்தை பேசியதை உணர்ந்துள்ளார்.

ரசிகர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளுடன் அமர்ந்து குடும்பத்தினர் ஐபிஎல் போட்டியை ரசித்துக்கொண்டிருக்கையில் இப்படி வார்த்தையை பயன்படுத்தலாமா என விமர்சனம் எழுந்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்