தொடர்ந்து 6-வது தோல்வியை சந்தித்த கொல்கத்தா!

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதும் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் குவித்தது.

கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக அதன் கேப்டன் தினேஷ் கார்த்திக் தனி ஒருவனாக கடைசி வரை போராடி 50 பந்துகளில் 9 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரியுடன் 97 ரன்கள் எடுத்திருந்தார்.

ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக வருண் ஆரோன் 2 விக்கெட்டுகளையும், தாமஸ், ஷ்ரேயஸ் கோபால், உனத்கட் ஆகியோர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் ரஹானே 34 (21) ரன்களிலும், சாம்சன் 22 (15) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 2, பென் ஸ்டோக்ஸ் 11, ஸ்டூவர்ட் பின்னி 11 போன்ற முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, கடைசி கட்டத்தில் களமிறங்கிய 16 வயது குட்டி பையன் ப்ராக் நிதானமாக விளையாடினான்.

மறுபுறம் ஜோடி சேர்ந்த ஜோப்ரா ஆர்ச்சர் இணைந்து அதிரடி காட்ட 19.2 ஓவரில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணிக்கு இந்த தோல்வியுடன் சேர்த்து தொடர்ந்து 6வது தோல்வியாகும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...