ஐபிஎல் வரலாற்றிலேயே புதிய சாதனை படைத்த அதிரடி வீரர் ரஸல்!

Report Print Kabilan in கிரிக்கெட்

ஐ.பி.எல் போட்டியின் கடந்த 12 ஆண்டுகால வரலாற்றில், சிக்சர்கள் மூலமாகவே அதிகமான ஓட்டங்களை அடித்த வீரர்களில் ஆண்ட்ரூ ரஸல் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

12வது ஐ.பி.எல் டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள ஆண்ட்ரூ ரஸல், தனது அதிரடியான ஆட்டத்தினால் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், ஐ.பி.எல் போட்டிகளில் சிக்சர்கள் அடித்ததன் மூலம் அதிகமான ஓட்டங்களைக் குவித்தவர் பட்டியலில் ரஸல் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதுவரை எந்த ஒரு வீரரும் சிக்சர்கள் மூலம் அதிகமான ஓட்டங்களை குவித்தது இல்லை.

ரஸல் இந்த சீசனில் 41 அடித்து 392 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 62 சதவித ஓட்டங்கள் சிக்சர்கள் மூலமாக வந்தவையாகும். இதன்மூலம் தொடர்ந்து 2வது ஆண்டாக இந்த சாதனையை ரஸல் தக்கவைத்துள்ளார்.

கடந்த ஆண்டு ரஸல் 31 சிக்சர்கள் அடித்து 316 ஓட்டங்கள் குவித்தார். இதில் 59 சதவித ஓட்டங்கள் சிக்சர்கள் மூலம் வந்தவையாகும். ரஸலுக்கு அடுத்த இடத்தில் மற்றொரு அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் உள்ளார்.

அவர் கடந்த 2016ஆம் ஆண்டு 733 ஓட்டங்கள் குவித்தார். அதில் 59 சிக்சர்கள் விளாசிய போதும், சதவிதம் அடிப்படையில் 48 சதவித ஓட்டங்களை மட்டுமே சிக்சர்கள் மூலம் எடுத்திருந்தார்.

சிக்சர்கள் மூலமாக அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள்
  • ரஸல் (2019) - 392 (41 சிக்சர்கள்)
  • ரஸல் (2018) - 316 (31 சிக்சர்கள்)
  • கெயில் (2016) - 227 (21 சிக்சர்கள்)
  • பொல்லார்டு (2019) - 195 (18 சிக்சர்கள்)
  • ஜேம்ஸ் பாக்னர் (2014) - 181 (16 சிக்சர்கள்)

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers