ராசியில்லை.... டாஸ் தோல்வி: சைகையால் காட்டிய கோஹ்லி

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்

2019 ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி.

சர்வதேச போட்டி என்றாலும், ஐபிஎல் என்றாலும் கோஹ்லிக்கும் டாஸுக்கும் எப்போதுமே பொருந்தாது. அவர் டாஸ் தோற்றுவிட்டார் என்றால் போட்டியிலும் தோல்விதான் என்பது போல கணிக்கப்படுகிறது.

பெங்களூர் அணி 11 ஆட்டத்தில் 8 முறை டாஸ் தோற்றுள்ளது. பெங்களூர், வான்கடே, சென்னை போன்ற மைதானத்தில் டாஸ் முக்கிய பங்கு வகித்தது.

அதில் டாஸ் தோற்றது அணியில் தோல்விக்கு முக்கிய பங்கு வகித்தது.

நேற்றைய போட்டியில் டாஸ் சுண்டப்பட்டபோது டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்றார். உடனே, விராட் கோஹ்லி பெங்களூர் வீரர்களை நோக்கி 9-வது முறையாக டாஸ் தோற்றுள்ளோம் என்பதை சைகை மூலம் காண்பித்தார். இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

அதே போன்று நேற்றைய ஆட்டத்திலும் 16 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 வெற்றிகளுடன் ‘பிளே-ஆப்ஸ்’ சுற்றுக்கு முன்னேறியது.

கோஹ்லி அணி 6 தோல்விகளுடன் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்