போதைமருந்து விவகாரத்தில் சிக்கிய இங்கிலாந்து வீரர்.. உலகக்கோப்பை அணியிலிருந்து அதிரடி நீக்கம்!

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் அலெக்ஸ் ஹால்ஸ், போதை மருந்து விவகாரத்தில் சிக்கியதால் உலகக்கோப்பை அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹால்ஸ், உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பிடித்திருந்தார். அத்துடன் அயர்லாந்து மற்றும் இலங்கை தொடருக்கான அணியிலும் இடம்பிடித்திருந்தார்.

ஆனால், சமீபத்தில் உலக்கோப்பை போட்டிகளிலிருந்து சொந்தக் காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் அவர் உற்சாக போதை மருந்து எடுத்துக்கொண்டது தெரிய வந்துள்ளது. வழக்கமாக ஒவ்வொரு சீசன் முடிவிலும் இங்கிலாந்து ஆடவர், மகளிர் வீரர்கள் சோதனை எடுத்துக்கொள்வார்கள்.

அதன்படி ஹால்ஸின் தலைமுடி வேர்க்கால் சோதனை நடத்தப்பட்டபோது, அவர் உற்சாக போதை மருந்து எடுத்துக் கொண்டது தெரிய வந்தது. இவ்வாறு இதுபோன்று போதை மருந்து எடுத்துக்கொண்டது முதல் முறை என்று தெரிய வந்தால், அது சுகாதாரம் மற்றும் சேமநல விவகாரமாகப் பார்க்கப்படும்.

அதே 2வது முறை என்றால் மூன்று வாரங்கள் தடை மற்றும் 5 சதவித அபராதம் வீரரின் வருவாயில் இருந்து விதிக்கப்படும். ஆனால், சமீபத்தில் சட்டம் திருத்தப்பட்டு 2வது முறையாக உற்சாக போதை மருந்து எடுத்துக் கொண்டால் தடை செய்யப்படும் முடிவு கொண்டுவரப்பட்டது.

எனவே, அலெக்ஸ் ஹால்ஸ் உற்சாக போதை மருந்து எடுத்துக் கொண்டது உறுதியானதால், உலகக்கோப்பை இங்கிலாந்து அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணியின் எதிர்கால நலன் கருதி, வாரியத்தின் மேலாளர், இயக்குநர் எடுத்த முடிவின்படி உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட உத்தேச அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

அலெக்ஸ் ஹால்ஸுக்கு பதிலாக மாற்று வீரர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. எனினும் விக்கெட் கீப்பர் ஃபோக்ஸ் அல்லது ஜோப்ரா ஆர்ச்சர் தெரிவு செய்யப்படலாம் என தெரிகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்