40 பந்தில் 80 ஓட்டங்கள் விளாசிய ரஸல்! காரணம் கூறும் தினேஷ் கார்த்திக்

Report Print Kabilan in கிரிக்கெட்

மும்பை அணிக்கு எதிராக 3வது வீரராக ரஸலை களமிறக்கியது நல்ல முடிவு என கொல்கத்தா அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

மும்பை-கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடந்தது. கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்புக்கு 232 ஓட்டங்கள் விளாசியது. பின்னர் ஆடிய மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 198 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது.

கொல்கத்தா அணியில் ஆந்த்ரே ரஸல் 3வது வீரராக களமிறங்கினார். அவர் 40 பந்துகளில் 8 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 80 ஓட்டங்கள் விளாசினார். இந்நிலையில், ரஸல் முன்னதாகவே களமிறக்கப்பட்டது குறித்து அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.

PTI

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஆந்த்ரே ரஸல் 3வது வீரராக முன்னதாக களம் இறக்கப்பட்டது நல்ல முடிவாகும். அவர் ஒரு சிறப்பு மிக்க வீரர் ஆவார். அவரது வளர்ச்சியை நாங்கள் நேரில் பார்ப்பது சிறந்தது.

மேலும் ஒரு அதிரடியான ஆட்டத்தை ரஸல் வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்தார். இதற்காக அவருக்கு நன்றியை தெரிவிக்கிறேன். எங்களது பந்து வீச்சாளர்கள் நெருக்கடியான கட்டத்தில் சிறப்பாக பந்து வீசினார்கள். தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது மகிழ்ச்சியை அளிக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

Saikat Das/BCCI

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்